சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்... இனி சக்குபள்ளம், ஹில்டாப்பில் கார் பார்க்கிங்!

 
சபரிமலை
 


சபரிமலை பக்தர்களுக்கு நல்ல செய்தி. கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மண்டல மகரவிளக்கு சீசனில் நிலக்கல்லில் இருந்து சபரிமலைக்கு கார்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சக்குபள்ளம் 2 மற்றும் ஹில்டாப்பில் 24 மணி நேரமும் வாகனங்களை நிறுத்துவதற்கு பக்தர்களிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

சபரிமலை

நீதிபதி அனில் கே.நரேந்திரன் மற்றும் நீதிபதி எஸ்.முரளி கிருஷ்ணா அடங்கிய தேவசம் பெஞ்ச், இந்த அனுமதி தற்காலிகமானது என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் முடிவை திரும்பப் பெறலாம் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. அத்தகைய நிலையில், கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரங்களும் காவல்துறைக்கு அனுமதிக்கப்படும். மேலும் மலை உச்சியில் 20 கேஎஸ்ஆர்டிசி அரசுப் பேருந்துகளை நிறுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சபரிமலை

சிறிய வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கேஎஸ்ஆர்டிசி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தேவசம் போர்டு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நீதிமன்ற தீர்ப்பு அவர்களின் சேவை வணிகத்தை பாதிக்கும் என்று கேஎஸ்ஆர்டிசி வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web