70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… உதவி தாமதமானதால் இளைஞர் பரிதாப பலி!

 
kaar

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியை சேர்ந்த யுவராஜ் மேத்தா (27) குருகிராமில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 16-ம் தேதி இரவு அலுவலகம் முடிந்து காரில் வீடு திரும்பிய போது, நொய்டா செக்டர் 150 பகுதியில் நள்ளிரவு 12.05 மணியளவில் அவரது கார் திடீரென 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரில் கார் மூழ்க தொடங்கியது.

kaar

படுகாயமடைந்த யுவராஜ் கடும் சிரமத்துடன் காரின் மேல் பகுதிக்கு ஏறினார். உடனே தந்தை ராஜ்குமார் மேத்தாவுக்கு போன் செய்து, “அப்பா என்னை காப்பாற்றுங்கள்… நான் சாக விரும்பவில்லை” என கதறினார். தகவல் கிடைத்ததும் போலீசாருக்கும் தீயணைப்பு படைக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் பள்ளத்தில் இறங்க முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டெலிவரி ஊழியர் மொகீந்தர் துணிச்சலுடன் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி மீட்பு முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடலை மீட்டனர். சம்பவ இடத்தில் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் காப்பாற்றியிருக்கலாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!