கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்... அடுத்தடுத்து கரை ஒதுங்கும் கண்டெயினர்கள்.!
கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்துள்ளனர். கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமானத்தின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வருகிறது. கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் குறைந்த கந்தக எரிபொருள் உள்ளதால், அவை கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் சரக்குக் கப்பலில் இருந்து 8 கண்டெயினர்கள் கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கண்டெயினர் அதிகாலை 4 மணிக்கு ஆலப்பாட் கடற்கரையிலும், அதைத் தொடர்ந்து 3 கண்டெயினர்கள் கொல்லத்தில் உள்ள நீண்டகரா கடற்கரையிலும் காணப்பட்டன. கடற்கரையை அடைந்த கண்டெயினர்களில் எந்த அபாயகரமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
