பகீர் வீடியோ... வேதிப்பொருளும், எரிபொருளும் ஏற்றிச்சென்ற 2 சரக்கு கப்பல்கள் மோதி கோர தீவிபத்து!

 
சரக்கு கப்பல்

 கிரீஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிக்கொண்டு  சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், ஸ்காட்லாந்திலிருந்து நெதர்லாந்துக்கு   வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு  சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது.

இரு கப்பல்களிலும் மொத்தம் 36 மாலுமிகள் பயணம் செய்தனர். இங்கிலாந்து தெற்கு கடற்பகுதியில் இன்று சரக்கு கப்பல்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒன்றோடு ஒன்று மோதின. இந்த சம்பவத்தில் இரு கப்பல்களும் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் கப்பல்களில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பல் விபத்து

இச்சம்பவத்தில் இரு கப்பல்களிலும்  சிக்கித்தவித்த 35 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரேஒரு மாலுமி மட்டும் மாயமான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கடல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web