உலக பிளிட்ஸ் செஸ் தொடரில் கார்ல்சென் அதிர்ச்சி தோல்வி!
உலக பிளிட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் மற்றும் அர்மேனியாவின் ஹேக் மார்ட்டிரோசியன் மோதினர். ஆட்டத்தின் 69-வது நகர்த்தலில் கார்ல்சென் நேர நெருக்கடியில் இருந்தார். அவரிடம் வெறும் 2 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில் வேகமாக காயை நகர்த்த முயன்றார்.
¡𝐃𝐑𝐀𝐌𝐀 𝐞𝐧 𝐞𝐥 𝐌𝐔𝐍𝐃𝐈𝐀𝐋! 🚨
— Chess.com en Español (@chesscom_es) December 30, 2025
Magnus Carlsen pierde su partida directamente después de darle al reloj sin colocar todas las piezas que tiró. 😱 pic.twitter.com/4ad3z1UeHe
ஆனால் பதற்றத்தில் கார்ல்சென் பல காய்களை தவறாக தட்டி கீழே விழுத்துவிட்டார். பிளிட்ஸ் செஸ் விதிகள் படி, காய்கள் கீழே விழுந்தால் நேரக் கடிகாரத்தை நிறுத்துவதற்கு முன் அவற்றை சரியாக வைக்க வேண்டும்.
கார்ல்சென் அதனை செய்யாமல் கடிகாரத்தை அழுத்தியதால் எதிராளி ஹேக் மார்ட்டிரோசியன் உடனடியாக முறையீடு செய்தார். நடுவர் கார்ல்சென் தோல்வியடைந்ததாக அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
