பட்டப்பகலில் நகை ட்ரேவை தூக்கிக் கொண்டு ஓட்டம்… கடைக்காரர் கண்முன்னே பரபரப்பு !

 
நகைக்கடை
 

மராட்டிய மாநிலம் நார்போலி பகுதியில் உள்ள நகைக்கடையில், கூட்டம் குறைவாக இருந்த நேரத்தை குறிவைத்து ஒரு நபர் வாடிக்கையாளர் போல நுழைந்தார். நீண்ட நேரம் நகைகளை உலாவி பார்த்த அவர், கடைக்காரரிடம் புதிய டிசைன் நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் எதுவும் இல்லாமல் கடைக்காரர் நகைகள் அடங்கிய ட்ரேவை எடுத்து காட்டினார்.

நகைகளின் விலை, வடிவம் குறித்து கடைக்காரர் விளக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அந்த நபர் திடீரென ட்ரேவை அப்படியே தூக்கிக்கொண்டு கடையிலிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் அவர் கடையை விட்டு வெளியேறி தப்பினார். கடைக்காரர் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாமல் போனது.

இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். பட்டப்பகலில், கடைக்காரர் கண்முன்னே நகை திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!