கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

 
கார் விபத்து

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இரண்டு குழந்தைகள் உட்பட பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், சிக்கஹோசல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர், இரவே தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகக் காரில் புறப்பட்டனர்.

கார் விபத்து

கர்நாடக பக்தர்கள் சென்ற கார், இன்று (நவம்பர் 29) அதிகாலை சுமார் 5 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், எம்மிகனூர் அடுத்த கோடேகல் கிராமத்தில் சென்றது. அப்போது, எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கர்நாடக பக்தர்கள் வந்த கார் நிலை தடுமாறி, அருகே உள்ள பள்ளத்தில் சென்று இறங்கி, அப்பளம் போல நொறுங்கியது.

இந்தக் கோர விபத்தில், அந்த வாகனத்தில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, இரத்தம் வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் விபத்து

மற்றொரு காரில் இருந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான 5 பேரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!