இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை!
இசைஞானி இளையராஜா 1976-ம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழைத் தொடங்கி பல இந்திய மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவர், 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி இசை உலகில் தனித்த இடத்தை பிடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள இளையராஜா, தனது படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது பாடல்கள், புகைப்படங்களை பல ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் அனுமதியின்றி பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பயன்பாட்டின் மூலம் கிடைத்த வருமான விவரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் மேலான விசாரணை அடுத்த 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
