வருமானத்தை விட 5.42 கோடி சொத்து குவித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு!
சென்னையில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் மீது வருமானத்தை விட அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.ா இந்த வழக்கு ராஜலட்சுமி என்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் மற்றும் அவரது குடும்பத்தின் மீது 2017 – 2025 காலகட்டத்தில் ரூ.5.42 கோடி மதிப்பிலான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தது. இது அவரது அதிகாரபூர்வ வருமானத்தை விட 372% அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பணியாளராக பணியாற்றியுள்ள நிலையில், அவர் தனது பெயரிலும், குடும்பத்தினரின் பெயரிலும் பல நிலங்கள், சொத்துக்கள் மற்றும் பங்கு முதலீடுகள் ஆகியவற்றை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த வழக்கு Prevention of Corruption Act பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட FIR நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சொத்துக்களின் நிலையை ஆய்வு செய்து, வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு ஊழல் தடுப்பு முயற்சிகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
