நாளை காவிரி ஆணையம் கூடுகிறது ...தமிழ்நாட்டுக்கு தண்ணீர் எவ்வளவு?
தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய காவிரி நீர் தொடர்பாக ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது. இந்த முக்கியக் கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தற்போதைய நீர்மட்ட நிலை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரளவு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. காவிரி நீர் பகிர்வு தொடர்பான முடிவுகள் விவசாயிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்த காவிரி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை விவகாரம் இடம்பெறவில்லை. இதனால், அந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
