தமிழக அரசுக்கு ‘செக்’ - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் 'கேவியட்' மனு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அதற்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதை எதிர்கொள்ள மனுதாரர் ராம ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்தவித இடைக்காலத் தடையோ அல்லது உத்தரவோ பிறப்பிக்கக் கூடாது என்பதே இந்த மனுவின் நோக்கமாகும்.
கடந்த ஆண்டு டிசம்பரில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழங்கால வழக்கப்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும், தீபத்தை யார் ஏற்ற வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அறிவித்துள்ளார்.

என்ன சர்ச்சை?:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணுக்கு அருகே ஒரு தர்கா இருப்பதால், அங்கு தீபம் ஏற்றுவது சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை வாதிட்டு வருகின்றன.
வழிபாட்டு உரிமைகள் பழங்கால வழக்கப்படி தொடர வேண்டும் என்றும், அதற்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருதுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்த விவகாரத்தில் மத்தியப் படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
