கரூர் நெரிசல் வழக்கு... விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்!
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன் ஜனவரி 12 மற்றும் 19ம் தேதிகளில் விஜய் நேரில் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளித்திருந்தார். தற்போது மீண்டும் நாளை டெல்லியில் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டம் தொடர்பான பொறுப்புகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்மன் தேர்தல் சூழலில் வெளியாகியுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
