சிபிஐ சம்மன்: நடிகர் விஜய் ஜன.12-ல் டெல்லியில் நேரில் ஆஜராகிறார் - என்ன நடக்கிறது?
கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்த இந்த வழக்கை, "தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்" எனக் கூறி உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் முகாமிட்டு, பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் 3D மேப்பிங் மற்றும் டிஜிட்டல் சர்வே மூலம் ஆய்வு செய்தனர். 10,000 பேர் மட்டுமே கூடக்கூடிய இடத்தில் 30,000-க்கும் அதிகமானோர் கூடியதே விபத்திற்கு முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் டெல்லி அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விஜய்யிடம் என்ன கேட்கப்படும்?
திட்டமிட்ட நேரத்தை விட விஜய் தாமதமாக வந்ததே கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியதா? கூட்ட நெரிசலைத் தவிர்க்க கட்சி சார்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? காவல்துறையிடம் பெறப்பட்ட அனுமதியை மீறிக் கூடுதல் நபர்கள் திரட்டப்பட்டார்களா?

சிபிஐ சம்மனை ஏற்று விஜய் வரும் ஜனவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்கிறார். 12-ம் தேதி காலை விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். விஜய்யின் வாக்குமூலத்திற்குப் பிறகு இந்த வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
