டெல்லி மதுபான வழக்கில் மீண்டும் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்!

 
கவிதா கவிதா

தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகளும், நிஜாமாபாத் முன்னாள் மேலவை உறுப்பினருமான கே. கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  பின்னர் சுமார் ரூ.100 கோடி அளவில் நடந்ததாக கூறப்பட்ட இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விசாரணைக்கு பிறகு அவருக்கு தொடர்பில்லை என நீதிமன்றம் கூறி விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்து விலகிய கவிதா விரைவில் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. வழக்கில் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவில்க்கு சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினார்.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற மத்திய புலனாய்வு நிறுவனம் அதிகாரிகள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறி சம்மன் வழங்கினர். இதுகுறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்டப்படி எதிர்கொள்வேன் என கவிதா சூளுரைத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!