கரூர் கூட்ட நெரிசல் வழக்கு… விஜய்க்கு சிபிஐ சம்மன்!
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், காவல் துறையினர், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவத்தின்போது ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் ஆட்சியர் மற்றும் எஸ்பிக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. மூன்று நாட்கள் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
