சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 7 பாடங்கள் கட்டாயம்!

 
தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (சி.பி.எஸ்.இ.), மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாக ஏழு பாடங்களைப் படிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் ஆலோசனையின்படி சி.பி.எஸ்.இ. இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களுக்கு வெறும் கல்வி அறிவு மட்டுமல்லாமல், நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

 மாணவர்கள் அதிர்ச்சி... சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 3 வது மொழி கட்டாயம்!

புதிய கல்விக் கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதுவரை இருந்த ஐந்து முதன்மைப் பாடங்களுடன், கூடுதலாக இரண்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. இனி, மாணவர்கள் மொத்தம் 7 பாடங்களைப் படிக்க வேண்டும்.

இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து முக்கியப் பாடங்கள்:கட்டாயமாக இருந்தன. தற்போது கூடுதலாக புதிதாக மற்றொரு இந்திய மொழியையும் கட்டாயம் ஒரு பாடமாக மாணவர்கள் படிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ

திறன் சார்ந்த பாடம்: மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், தொழில் சார்ந்த ஒரு பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு செய்யக்கூடிய திறன் சார்ந்த பாடங்களுக்கான பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. அவற்றில் சில: கணக்கீட்டுச் சிந்தனை (Computational Thinking), உடற்கல்வி மற்றும் நலவாழ்வு, கலைக் கல்வி, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், சில்லறை விற்பனை மற்றும் நிதிசார் கல்வி. இந்த மாற்றங்கள், இந்திய மாணவர்களின் கல்வி அணுகுமுறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!