சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!! எப்படி பார்ப்பது?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் பெற்றொர்கள் தடுமாறி வந்தனர். ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 97.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 92.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது.
2023ல் 87.33 % மாணவ மாணவிகளும், 2022ல் 92.71 % பேரும், 2021ல் 99.04% பேரும், 2020ல் 91.46% பேரும், 2019ல் 91.1% பேரும், 2018ல் 86.7 பேரும் 2017ல் 93.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும் பெற்றோர்களும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இது தவிர https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளைக் காணலாம். இந்த இணையதளங்களில் மாணவர்களின் பதிவு எண், பள்ளி எண், நுழைவுச் சீட்டு எண் இவைகளை உள்ளீடு செய்து, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!