10,12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

 
சிபிஎஸ்இ

10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் எப்போது பொதுத்தேர்வு என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. தற்போது சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு பயிலும்  மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒரே நாளில் நடத்தப்படும்.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு அதாவது 2023-24 ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.  

பிரதமர் மோடி தலைமையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் குறித்து ஆலோசனை

12ம் வகுப்பு மாணவர்களுக்கு   பிப்ரவரி 17,2024  முதல் ஏப்ரல் 10, 2024 வரை நடத்தப்பட உள்ளது.   10ம் வகுப்பு மாணவர்களுக்கு  பிப்ரவரி 15,2024 முதல் மார்ச் 21,2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web