10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பொதுத்தேர்வு .... சி.பி.எஸ்.இ. விளக்கம்!
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
முதல் தேர்வு எழுதாமல் இரண்டாவது தேர்வை மட்டும் எழுதலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. இதற்கு சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தற்போது தெளிவான விளக்கம் வழங்கியுள்ளனர். மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் இரண்டாவது பொதுத்தேர்வில் அதிகபட்சமாக மூன்று பாடங்களை மட்டும் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது தேர்வு மதிப்பெண் உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே முதல் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் எழுதினால் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
