சிபிஎஸ்இ பள்ளிப் படிப்பில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்!

 
மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!! மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!

 

 தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கும் பணிகளை மத்திய வாரியம் தொடங்கியுள்ளது. வரும் 2026-27 கல்வியாண்டு முதல், முதற்கட்டமாக 6-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மாணவர்கள் குறைந்தது 2 இந்திய மொழிகளைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ

தற்போதுள்ள நடைமுறைப்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மொழிக் பாடம் குறித்த தேர்வுகள் இருந்து வரும் நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, வரும் 2031-ம் ஆண்டுக்குள் 10-ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மும்மொழிக் கொள்கையை முழுமையாகக் கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாய்மொழி அல்லது பிராந்திய மொழிகளுடன் கூடுதலாக மற்றொரு இந்திய மொழியைக் கற்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சிபிஎஸ்இ

தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய வாரியத்தின் இந்த அறிவிப்புப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் அறிமுகமாகும் இந்த மாற்றம், படிப்படியாக உயர்வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்துப் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இதற்கான அடுத்தகட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!