சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இனி 3 மொழிகள் கட்டாயம்.... அதிரடி உத்தரவு!

 
சிபிஎஸ்இ சிபிஎஸ்இ

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, நாடு முழுவதும் உள்ள தனது பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையின் படி பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இனி 3 மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த மும்மொழி கொள்கையின் கீழ் மாணவர்கள் குறைந்தது 2 இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கல்வி வட்டாரத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ

இந்த அதிரடி மாற்றமானது வரும் 2026-27 கல்வி ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தை ஒரு அந்நிய மொழியாகக் கருதும் இந்த புதிய கட்டமைப்பு, இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதுடன், இது மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்கும் முயற்சி என்று கல்வியாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

சி.பி.எஸ்.இ-யின் இந்த முடிவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எப்போதும் போல இருமொழி கொள்கையே தொடரும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளுக்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கல்வித்துறையில் புகுத்தப்பட்டுள்ள இந்த புதிய மாற்றத்தால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் தற்போது ஒருவித குழப்பமான சூழலில் தவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்