பகீர் சிசிடிவி காட்சிகள்... 2 பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய ஆட்டோ... 2 பேர் உடல் நசுங்கி பலி!

 
அக்கரஹாரா


 

பெங்களூரில்  கே.பி அக்கரஹாரா பகுதியில் வசித்து வந்தவர் அணில் குமார் .  இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீதா சர்க்கிள்  சாலையில் 80 வயதான டாக்டர் விஷ்ணு பபாத் என்பவருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் BMTC பேருந்துக்கு பின்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு BMTC பேருந்து ஆட்டோவில் மோதியதில்   நசுங்கியது. 

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் டாக்டர் விஷ்ணு பபாத் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் வந்த காவல்துறையினர், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்து

இதில்  அணில் குமாருக்கு ஒரு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் விஷ்ணு பபாத்  தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே இந்த விபத்தில்  உயிரிழந்தார்.  தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில்  வெளிநாட்டிலிருந்து வந்த மகன், மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் வழியில் தந்தையின் மரண செய்தி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web