பகீர் சிசிடிவி காட்சிகள்... ரயில் பாதையில் குண்டு வெடிப்பு.... 6 பெட்டிகள் தடம் புரண்டன!

பாகிஸ்தானில் ஜூன் 18ம் தேதி புதன்கிழமை ரயில் பாதைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மோதியதில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லையான சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தைக்கு அருகிலுள்ள ரயில் பாதைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜாஃபர் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை ஏராளமான போலீசார் சுற்றி வளைத்தனர். குண்டுவெடிப்பின் தன்மை குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!