பகீர் சிசிடிவி காட்சிகள்... திடீரென மிரண்டு ஓடிய யானை - 42 பேர் காயம்!
May 8, 2025, 13:20 IST
கேரள மாநிலம் புகழ்பெற்ற திருச்சூர் பூரத்தில் கலந்து கொண்ட யானை ஒன்று மிரண்டு ஓடியது. இதில் 42க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
எம்ஜி சாலையில் நீண்ட தூரம் யானை மிரண்டு ஓடியதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அப்போது கூட்ட நெரிசலில் ஒருவருக்கொருவர் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினரை சேர்ந்த யானை பாதுகாப்பு படையினர் மற்றும் யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே படுகாயம் அடையந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீரென யானை மிரண்டு ஓடத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
