பகீர் சிசிடிவி காட்சிகள்... காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்... தீக்குளித்த காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆகிரா நகரில் உள்ள கிங் பார்க் அவென்யூ ஹோட்டலில் ஏப்ரல் 8 ம் தேதி அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அதன்படி அவருடைய காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவாகியது. இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான இளைஞர், ஹோட்டல் அறையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அத்துடன், அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
📍 आगरा: प्रेमी के खुद को आग लगाने का वीडियो आया सामने
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 9, 2025
🔥 होटल में प्रेमिका के सामने खुद को लगाई थी आग
💔 प्रेमिका को बचाने में वह भी झुलसी
😷 प्रेमी की हालत गंभीर, प्रेमिका की शादी तय होने से था परेशान
🎥 पूरी घटना होटल के सीसीटीवी कैमरे में हुई कैद
🔹 थाना हरीपर्वत क्षेत्र का… pic.twitter.com/Lep5Agrszl
📍 आगरा: प्रेमी के खुद को आग लगाने का वीडियो आया सामने
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 9, 2025
🔥 होटल में प्रेमिका के सामने खुद को लगाई थी आग
💔 प्रेमिका को बचाने में वह भी झुलसी
😷 प्रेमी की हालत गंभीर, प्रेमिका की शादी तय होने से था परेशान
🎥 पूरी घटना होटल के सीसीटीवी कैमरे में हुई कैद
🔹 थाना हरीपर्वत क्षेत्र का… pic.twitter.com/Lep5Agrszl
இச்சம்பவம் குறித்து ஹோட்டல் மேலாளர் அங்கித் டாண்டன் கூறியதாவது, “அந்த இளைஞரும் பெண்ணும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அறையிலிருந்து கத்தும் சத்தங்கள் கேட்டன. பிறகு அந்த இளைஞர் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார் . தீயை வைத்து கொண்டு அந்த இளைஞர் தன் அறையிலிருந்து வெளியே வந்தார். தீயைஅணைக்க முயன்ற காதலி கூட தீக்காயங்களுடன் போராடி வருகிறார். பணியாளர்கள் ஓடி வந்து உதவினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் ஹோட்டலுக்கு விரைந்து சென்று, தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹோட்டல் அறை தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!