பகீர் சிசிடிவி காட்சிகள்... மாணவியர் விடுதியில் பயங்கர தீ விபத்து…. பால்கனியில் இருந்து குதித்த மாணவிகள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிரேட்டர் நொய்டா Knowledge Park-3 பகுதியில் உள்ள அன்னாபூர்ணா பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பிக்க பல மாணவிகள் தங்கள் விடுதி அறைகளிலிருந்து பால்கனி வழியாக குதித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A sudden fire broke out on Tuesday evening at Annapurna Girls' Hostel, located in the Knowledge Park-3 area of Greater Noida, causing panic in the locality.
— Siddhant Anand (@JournoSiddhant) March 28, 2025
The fire started due to an air conditioner (AC) blast in the hostel and spread rapidly.
At the time of the incident,… pic.twitter.com/ncIeqxpOgM
தீவிபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின. 160 மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், மாணவிகள் பால்கனியில் நின்று உயிரை காப்பாற்ற கத்தி கூச்சலிட்டனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் சிலர் வெளியில் வெளியேறும் வழி இல்லாத நிலையில், ஏசி யூனிட்டுகளைப் பயன்படுத்தி கீழே இறங்க முயற்சித்துள்ளனர். புகைமூட்டம் மிகுந்ததால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பலரும் “வெளியே வாருங்கள்” என கோஷமிடும் காட்சிகள் வீடியோவில் காணப்படுகிறது. இந்த சம்பவம் மாணவிகள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!