பகீர் சிசிடிவி காட்சிகள்...சாலையில் நடந்து சென்ற இளம்பெண் மீது மோத வந்த மினி வேன்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்…!!

இந்தியாவில் ஹைதராபாத்தில் சாலையில் நடந்த கோரவிபத்தில் இளம்பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உப்பல் பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் சாலையின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
An accident occurred on Sunday in Uppal, where a speeding minivan lost control, nearly running over a young woman before crashing into a power pole. CCTV footage captured the dramatic moment as the girl noticed the van just in time and swiftly moved aside, narrowly avoiding the… pic.twitter.com/aNbtQeFQEE
— The Siasat Daily (@TheSiasatDaily) March 24, 2025
அப்போது திடீரென அவருக்கு எதிரே வந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவருக்கு மிகமிக அருகில் அவரை மோதும்படி அவரின் முன்னாள் வந்தது. இதனை பார்த்த அந்த பெண் தன்னை காப்பாற்றிக் கொள்ள சாலையின் பக்கவாட்டில் ஓடினார். இதனால் அவர் அந்த விபத்தில் இருந்து தப்பிவிட்டார். அத்துடன் அந்த மினி வேன் அங்கிருந்த கம்பத்தின் மீது மோதி நின்றது.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த கோர விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!