பகீர் சிசிடிவி காட்சிகள்... உடற்பயிற்சி செய்த போது இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி!

 
பகீர் சிசிடிவி காட்சிகள்... உடற்பயிற்சி செய்த போது இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயதில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உடற்பயிற்சி நடனம் விளையாட்டு ஆடும் போது மயங்கி சரிந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இளவயது, நடுத்தர வர்க்கத்தினர், குழந்தைகளும்கூட இந்த வகையான மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் வசித்து வருபவர் பிரமோத். இவர் ஏப்ரல் 17ம் தேதி அதிகாலையில் உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். திடீரென உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு, தெருவோரம் அமர்ந்திருந்தார். சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தார். சில மணி நேரம் கழித்து அந்த வழியாகச் சென்றவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்திற்கு மாரடைப்பு ஒருவேளை காரணமாக இருக்கலாம். அவருடைய திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?