பகீர் சிசிடிவி காட்சிகள்... சுற்றி சுழன்ற சூறாவளி... சாலையில் சென்ற கார் மீது விழுந்த விளக்கு கம்பம்!

 
 பகீர் சிசிடிவி காட்சிகள்... சுற்றி சுழன்ற சூறாவளி... சாலையில் சென்ற கார் மீது விழுந்த விளக்கு கம்பம்!  


உத்தரப்பிரதேச மாநிலத்தில்  நொய்டாவில்  வானிலை மிக மோசமாக மாறியது. இதனால்  பலத்த புயலுடன் மழை பெய்யத் தொடங்கியது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால் வளைந்து அந்தக் கார் மீது சரிந்து விழுந்தது.


இச்சம்பவம் குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிவிட்டது. டிஎன்டி பறக்கும் பாதையில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் டெல்லி-நொய்டா இடையே மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  செக்டார் 9 பகுதியில் ஒரு மின்-ரிக்ஷா மீது மரம் விழுந்தது, ஆனால் அதில் பயணிகள் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து  மாவட்ட நிர்வாகம் மற்றும் நொய்டா ஆணையம் இணைந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது .   நிலையற்ற வானிலை நிலவி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது