பகீர் சிசிடிவி காட்சிகள்... நடுரோட்டில் காரை நிறுத்தி சிறுநீர் கழித்த இளைஞர்....!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சாலையோர தடுப்பு சுவரில் சிறுநீர் கழிக்கிறார். அதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தட்டிக்கேட்கிறார்.
Pune's Drunken Brats on a Rampage — Protected by Money, Power, and Political Clout! 🚨
— Vijay Kumbhar (@VijayKumbhar62) March 8, 2025
The spoiled, drunk sons of wealthy families in Pune have turned the city into their personal playground of terror. Armed with their father's wealth and influence, they believe they are above… pic.twitter.com/4G01mQSxgz
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரில் ஏறி அமர்ந்து ஆடையை கழற்றி வாகன ஓட்டியை நோக்கி ஆபாச செய்கை காட்டி அங்கு இருந்து தப்பி செல்கிறார். காரில் மேலும் ஒரு இளைஞர் மதுபாட்டிலுடன் இருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது.இந்நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடுரோட்டில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர் புனேயை சேர்ந்த ஓட்டல் அதிபர் மனோஜ் அகுஜாவின் மகன் கவுரவ் அகுஜா என்பது தெரியவந்தது.
அவர், நண்பருடன் நேற்று காலை 7.30 மணிக்கு காரில் புனே ஏரவாடா சாஸ்திரிநகர் சிக்னல் அருகே சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து போலீசார் கவுரவ் அகுஜா மற்றும் அவருடன் காரில் இருந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!