பகீர் சிசிடிவி வீடியோ... அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியை 7,8 தெருநாய்கள் கடித்துக் குதறிய பரிதாபம்!

நாடு முழுவதுமே சமீப காலங்களாக தெருநாய் கடிக்குள்ளாகி பலரும் உயிரிழந்து வருகின்றனர். தெருநாய்களைப் போலவே சாலைகளில் மாடுகள் திரிவதாலும் பல விபத்துக்கள்நேர்கின்றன. இந்நிலையில், அப்பார்ட்மெண்ட் ஒன்றின் செக்யூரிட்டியை ஏழெட்டு தெருநாய்கள் சேர்ந்து கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை தெருநாய்கள் யாரையும் விடுவதில்லை. பல நேரங்களில் நாய் கடிக்கு உள்ளாகி உயிருடன் போராடி மீள்கின்றனர். தெருநாய் தொல்லைகளில் இருந்து தப்பிக்கத் தெரியாமல் பொதுமக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
A guy Beats innocent Watchman for Defending himself Against Dogs Attack, Andheri Mumbai
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 6, 2025
pic.twitter.com/G5CrGxf2g5
இந்நிலையில் மும்பை அந்தேரியில் உள்ள உயர்ரக அப்பார்ட்மெண்ட் ஒன்றின் பாதுகாவலர் ஒருவரை 7 முதல் 8 தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றிப் போட்டன. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாதுகாவலரை 7, 8 தெரு நாய்கள் கடிக்க முற்பட்டது. அப்போது பாதுகாவலர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, தான் கையில் வைத்திருந்த கம்பை வைத்து நாய்களை தடுத்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர் விரைந்து சென்று பாதுகாவலர் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எந்த குற்றமும் செய்யாத பாதுகாவலரை தாக்கியதால், இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாவலர் பலத்த காயம் அடைந்தார். அதோடு அந்த மர்ம நபரிடம், தன்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!