பகீர் சிசிடிவி வீடியோ ... இளம்பெண் நர்வால் உடலை சூட்கேஸில் எடுத்துச் செல்லும் இளைஞர்!

 
நர்வால்

காங்கிரஸ் இளம்பெண் நிர்வாகி ஹிமானி நர்வால் கொலைச் செய்யப்பட்டு அவரது சடலம் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நர்வாலைக் கொலைச் செய்து அவரது உடலை சூட்கேஸில் இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியில் வசித்து வந்த காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால். இவருக்கு  சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி  இவர்கள் இருவருக்கும் இடையே பணம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சச்சின், ஹிமானி நர்வாலை கைபேசி சார்ஜிங் செய்யும் ஒயரை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டான்.

தனையடுத்து ஹிமானியின்  உடலை கருப்பு நிற சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சிசிடிவி விபரங்கள் அனைத்தும் தெரியவந்தது. 

நர்வால்

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி  இந்த கொலையை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளன. விரைவில் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?