கொண்டாடுங்க மாணவர்களே!! ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை!!

 
விடுமுறை

சைவ சமயத்தின் தலைமை பீடமாக போற்றப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவில். இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்குனி உத்திர உற்சவ திருவிழா உலக பிரசித்தி பெற்றது. திருவிழாவின் அனைத்து நாட்களும் களை கட்டும் என்ற போதிலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டத்தை காண தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் ஒன்று கூடுவர்.  

திருவாரூர்

அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி சனிக்கிழமை  நடைபெற உள்ளது.  பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.  தினசரி  உற்சவம், பகல் இரவு இரு வேளைகளிலும்  சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமை முதல் மார்ச் 18ம் தேதி வரை பக்தோற்சவம் எடியார் கூடும் திருவிழாவும், 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் திருவிழாவும், மார்ச் 20ம் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடைபெற உள்ளது.  தினசரி விநாயகர், சந்திரசேகரரர், அம்பாள்,  முருகன், சண்டிகேஸ்வரர் மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை

இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ளது.  ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது. அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாக உள்ளது. இந்த தேரின் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web