கொண்டாடுங்க மாணவர்களே!! இன்று முதல் ஏப்ரல் 16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் அளவு அடுத்த 5 நாட்களில் மேலும் உயரக்கூடும் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன் அடிப்படையில் பள்ளிகள் , கல்லூரிகளில் விரைவில் ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க அந்தந்த மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில் ஒடிசாவிலும் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

விடுமுறை

பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. 
இந்நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை இன்று  முதல்  ஏப்ரல் 16 வரை மூடும்படி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

வெயில்
 அத்துடன் இந்த நாட்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12-ம் வகுப்பு வரை, இன்று முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web