கொண்டாட்டம்!! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய வீரர் அஷ்வின்!!

 
அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமைக்கேற்ப தரவரிசை பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் வீரர்களை ஊக்குவிக்கவும் , தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். அந்த வகையில் இதுவரை சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தை பிடித்திருந்தவர் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 

தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் தமது அபார ஆட்டத்தின் மூலம் முதலிடத்தை தனதாக்கியுள்ளார். இந்த தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், டி20 என ஒவ்வொன்றிற்கும் ஏற்ப மாறுபடும். கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுடைய தரவரிசை பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 

Ashwin

அந்த வகையில், டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்திலும்,ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும், பும்ரா 4வது இடத்திலும் ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web