நாடு முழுவதும் கொண்டாட்டம்.... வெளியானது மாஸ் அறிவிப்பு... அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கப்படும்... இந்தியன் ரயில்வே தகவல்!

 
அயோத்தி ராமர்

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. பல மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த், குடும்பத்தோடு கலந்து கொள்கிறார். இந்நிலையில், ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு  நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்களின் சேவைகளைத்  தொடங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்ல வசதியாக ரயில் போக்குவரத்து மூலம் இணைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்காக சிறிய ரயில் நிலையமாக இருந்த அயோத்தி தாம் ரயில் நிலையம்  240 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே புதிய விமான நிலையமும் அங்கு திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் அதிக அளவில் மக்கள்  அயோத்தி செல்ல ஏதுவாக ரயில் போக்குவரத்தை அதிகரிக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் இருக்கும் 16 ரயில்வே மண்டலங்கள் சார்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரயில்கள் அனைத்தும்  சேவையைத் தொடங்கும் என்றும் ரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web