அடி தூள்!! மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்!! அதிரடி அறிவிப்பு!!

 
பாஜக

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்துவருகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அங்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற பாஜக இப்போதே திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கிவிட்டது என்றே கூறலாம். 

பாஜக

அந்த வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தியும், அறிவித்தும் வருகின்றன. அந்த வரிசையில், உத்தரபிரதேசத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது லேப்டாப்கள் வழங்க பட்ஜெட்டில் 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா சட்டப்பேரவையில், 2023- 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பட்ஜெட்டில் மொத்த மதிப்பில் 6.90 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்தார். கடந்த 2022- 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு 6.15 லட்சம் கோடியாக இருந்தது. அதனை விட இந்த முறை 75 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக

இந்த பட்ஜெட்டில் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது லேப்டாப்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?


     

From around the web