செல்போனில் விளையாட்டு... பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை!

 
மாணவி கடத்தல் காணவில்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போனில் அதிக நேரம் ‘கேம்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்ததைப் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை பேட்டை சேரன்மகாதேவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி கல்லூரியில் சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் வீட்டில் இருந்த அறைக்குள் சென்ற மாணவி பிரியதர்ஷினி வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. 

பள்ளி மாணவி

இந்நிலையில் அறைக்குள் இருந்து நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டினர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் தட்டியும் பிரியதர்ஷினி கதவை திறக்கவில்லை. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரியதர்ஷினி சேலையில் தூக்கிட்டு தொங்கினார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து பார்த்த போது பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் விரைந்து சென்று பிரியதர்ஷினி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

தற்கொலை

கல்லூரியில் தேர்வு நெருங்கி வரும் நிலையில் பிரியதர்ஷினி செல்போனில் வெகுநேரம் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்து திட்டி உள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?