செல்போன் பறிப்பு... சிறுவன் உள்பட 4 பேர் கைது!

 
செல்போன் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே செல்போன் பறித்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே வீரபாண்டியன்பட்டினம், மடோனா தெருவைச் சேர்ந்த ராமன் மகன் லட்சுமணகுமார். கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவியின் ஊரான சிவகாசியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு புன்னைக்காயல் பேருந்தில் ஏறி, ஆத்தூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

பின்னர் போதிய பணமில்லாததால் அவர் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றாராம். அப்போது, பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டனராம். அவர் பணமில்லை எனக் கூறியதால், அவரது செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்களாம். 

செயின் பறிப்பு

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார்ர் விசாரித்து, தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சக்திவேல் (20), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் மகன் வைரமுத்து (19), லெவஞ்சிபுரம் பால்ராஜ் மகன் செல்வராஜ்(19), தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது