இன்று நாடு முழுவதும் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 33 கேள்விகளுடன் தொடக்கம்!
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணிகள் இன்று ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. இந்தப் புதிய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அறைகளின் எண்ணிக்கை, தொலைக்காட்சிப் பெட்டி, இருசக்கர வாகன வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து மொத்தம் 33 கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன. டிஜிட்டல் முறையிலான இந்த மாற்றங்கள் மூலம் நாட்டின் தற்போதைய வாழ்வாதார நிலையைத் துல்லியமாகக் கணக்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தில் வரும் ஜூலை 17-ம் தேதி முதலே முதற்கட்டக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிப் புதிய அரசு அமைந்த பிறகு, கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடு வீடாக வந்து தகவல்களைச் சேகரிப்பார்கள் என வருவாய்த் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இரண்டாம் கட்டக் கணக்கெடுப்புப் பணிகள் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் இரண்டாம் கட்டப் பணியின்போது தனிநபர்களின் கல்வித் தகுதி, தொழில் மற்றும் வயது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மிகப்பெரிய பணியின் மூலம், அரசின் நலத்திட்டங்களைச் சரியான மக்களிடம் கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
