நிம்சுலைட் மருந்துக்கு மத்திய அரசு உடனடி தடை!

 
நிம்சுலைட்

காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் நிம்சுலைட் மருந்து அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த மருந்துக்கு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் நலனை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 100 மி.கிராமுக்கு மேற்பட்ட அளவில் உள்ள நிம்சுலைட் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் அனைத்தும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. ஆனால் 100 மி.கிராமுக்கு குறைவான அளவில் உள்ள மருந்துகளை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் நிம்சுலைட் மருந்துக்கு முதன்முறையாக 1995 ஆம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியது. தற்போது இந்த மருந்து உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், அதன் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, இப்போது இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!