மத்திய அரசு எச்சரிக்கை!! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் ஜெட் வேகமெடுக்கும் கொரோனா!!

 
கொரோனா


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனொ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தவறாமல் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. தற்போது தமிழகம்  உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  இந்தியா  முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று வேகமெடுத்துள்ளது.

கொரோனா

இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  இதில் கடந்த மாதம் 2 வது வாரத்தில், தினமும் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது தினமும்  சராசரியாக 966 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான்  மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவு பதிவாகி வருகிறது.  

கொரோனா

இந்த மாநிலங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  உலக அளவிலான பாதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு சதவிகிதம் பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web