செம.... விமான உணவு வீணாகாதிருக்க… சிஇஓ நெகிழ்ச்சி பழக்கம்!

 
விமானப் பணியாளர்
 

விமானப் பயணங்களில் வழங்கப்படும் உணவுகள் அதிகம் வீணாகின்றன. இதைக் கவனித்த ‘UnLtd India’ நிறுவனத்தின் சிஇஓ அன்ஷு பார்டியா, ஒரு எளிய பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார். விமானங்களில் மீதமாகும் மூடப்பட்ட தயிர், பன், வெண்ணெய் போன்றவற்றை குப்பையில் போக விடாமல் கைப்பையில் எடுத்துச் செல்கிறார். பின்னர் அவற்றை தேவைப்படுவோருக்கு வழங்குகிறார்.

ஆரம்பத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் இருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால் உணவு வீணாவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய ஒரு விமானப் பயணத்தில், இன்னொரு பயணியும் இதேபோல் உணவை சேகரித்ததைப் பார்த்து நெகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் விமானப் பணியாளர் ஒருவரும் உதவி செய்ததாகவும் கூறுகிறார்.

மூடப்பட்ட உணவுப் பொட்டலங்களை வீசுவதற்குப் பதில், யாருக்காவது கொடுத்தால் அது ஒரு நாளையே மாற்றும் என அன்ஷு பார்டியா தெரிவித்துள்ளார். இதுபோன்ற பழக்கங்கள் குறித்து விமான நிறுவனங்களும், டிஜிசிஏவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அவரது இந்த லிங்க்ட்இன் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!