‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சான்றிதழ் தாமதம்… சென்சார் வழக்கு நாளை ஒத்தி வைப்பு !

 
ஜனநாயகன்
 

நடிகரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9, 2026 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முழு நேர அரசியலுக்கு Vijay தயாராகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் படம் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

ஜனநாயகன்

படத்தின் டிரெய்லர் வெளியானதும் மில்லியன்களை எட்டிய பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. ஆனால், வெளியீட்டுக்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி தணிக்கை குழு சில காட்சிகளில் வன்முறை குறைக்கவும், சில டயலாக்குகளை மியூட் செய்யவும் பரிந்துரைத்தது. படக்குழு அவற்றை செய்து மீண்டும் சமர்ப்பித்தாலும், ஜனவரி 6 வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை; வெளிநாடுகள் மற்றும் கர்நாடகா, கேரளாவில் மட்டுமே முன்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜனநாயகன்

தவெக தரப்பில் இது எதிர்ப்பாக செய்யப்படும் தாமதம் என்று குற்றம்சாட்டி, படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. விசாரணை ஜனவரி 6 மதியம் நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றம் ஜனவரி 7-க்கு ஒத்திவைத்தது. படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது; இது தணிக்கை தாமதத்திற்கு கூடுதல் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சான்றிதழ் பிரச்னை தீர்ந்தால், ஜனவரி 9 அன்று ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!