திறமைக்கு சவால்... பெஸ்ட் போட்டோவுக்கு ரூ.1 லட்சம் பரிசு! எப்படி அனுப்புவது?! முழு விபரம்!

 
முகம் பளபளப்பாக இருக்க இயற்கை பேஷியல்!

நல்ல குரல் வளம் உள்ளவர்கள் நிறைய பேர், இன்றளவிலும் எந்த போட்டிகளிலும் பங்கு பெறாமல் பாத்ரூம் பாடகர்களாகவே கடைசி வரையில் இருந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இப்படியான திறமைகள் எல்லாம் அவர்களின் ஆழ்மனதுள் உறங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்வின் மிச்ச நாட்கள் ஏக்கங்களுடனே கழிந்து விடுகிறது. அதைப் போலவே சாதாரண செல்போனிலேயே மிகப் பிரமாதமாக நிலவையோ, மின்னலையோ, பட்டாம்பூச்சியையோ என அத்தனை அற்புதமாக தங்களது திறமையால் படம்பிடிப்பவர்கள் இருக்கின்றனர். ஆனால், யாரிடமும் காட்டாமல் அவர்களே பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். உங்கள் புகைப்பட திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை 4ஆவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழா மற்றும் உணவுத்திருவிழா நடைபெறும் நிலையில், விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டியும் நடத்தப்படுகிறது.

கேரளா இயற்கையழகு இயற்கை

இந்த போட்டிக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள், தாமிரபரணி ஆற்றின் இயற்கை எழில்கள், இம்மாவட்ட  மக்களின் வாழ்வியல், சமூகத்தின் பிரதிபலிப்புகள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், மக்களின் தினசரி வேலைசார்ந்த நிகழ்வுகள், தொழில் சார்ந்த படைப்புகள், தனிநபர்களின் வித்தியாசமான அணுகுமுறைகள், சுற்றுப்புறச்சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் என அனைத்து வகையான புகைப்படங்களையும் எடுத்து அனுப்பலாம், மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனைவருக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இதுஒரு நல்ல வாய்ப்பு. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் எடுத்த புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 

தூத்துக்குடி
இந்நிலையில் அதிகபட்சமாக 5 புகைப்படக்களை ஒரு நபர் எடுத்து தேர்வு செய்ய அனுப்பலாம். எனவே புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் விருப்பம் இருந்தால் தங்களது புகைப்படங்களை ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர்  கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web