சாம்பியன் டிராபி கொண்டாட்டம்... ரசிகர்களுக்கு மொட்டையடித்து ஊர்வலம் அழைத்து சென்ற காவல்துறை!

சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள சாம்பியன் டிராபி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தேவாஸ் மாவட்டத்தில், இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடிய சில இளைஞர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வெற்றிப் பெற்றதை உற்சாகமாக கொண்டாடிய இளைஞர்களை காவல்துறை தடுக்க முயற்சி செய்ததாகவும், பின்னர் அவர்களுக்கு மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ காயத்ரி ராஜே புவார், தேவாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புனித் கெஹ்லோட்டுடன் நேரில் சந்தித்து உரையாடினார். “இந்த இளைஞர்கள் நாட்டின் வெற்றியை மற்ற அனைவரைப் போல் கொண்டாடினர். அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் அல்லர்.
காவல்துறை அவர்களை இப்படி அலட்சியமாக பொதுவெளியில் நிறுத்தி அவமானப்படுத்தியிருப்பது முற்றிலும் தவறானது,” என கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் இந்த நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் இச்சம்பவத்திற்கு உடனடி விசாரணை நடத்த காவல்துறை உறுதி அளித்துள்ளது.
இந்த விவகாரம் தேவாஸ் நகரில் நடைபெற்ற மிகப்பெரிய கொண்டாட்டங்களின் பின்னணியில் ஏற்பட்டது. போலீசார் குறிப்பாக சாயாஜி கேட் அருகே சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசு வெடிக்க முயன்றதை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், இது இளைஞர்களுடன் மோதலாக மாறியது. வீடியோ காட்சிகள் காட்டும் படி, சில இளைஞர்கள் காவல்துறையினரை தவறாக நடத்தினார்கள். சிலர் காவல்துறை வாகனத்தைதுரத்தியும், கற்கள் எறிந்தும் தாக்கினர். இதற்காக 10 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதன் பின்னர், காவல்துறை இந்த இளைஞர்களை பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. மறு நாள் வெளியான வீடியோக்களில், காவல்துறையினர் இந்த இளைஞர்களுக்கு மொட்டையடித்ததோடு போலீஸ் நிலையத்திலிருந்து சாயாஜி கேட் வரை நடக்க வைத்ததாக காணப்படுகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!