சாம்பியன்ஸ் கோப்பை... மார்ச் 9ம் தேதி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து!

 
இந்தியா கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வரும் மார்ச் 9ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி.

முன்னதகாக லாகூரில் நேற்று மார்ச் 5ம் தேதி நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 363 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட்

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியினர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் துவங்கினர். ஆக்ரோஷமான ஆட்டத்தை தென்னாப்பிரிக்க வீரர்கள் வெளிப்படுத்திய போதிலும் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா கிரிக்கெட்

இந்த வெற்றியின் மூலம் வரும் மார்ச் 9ம் தேதி துபாயில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. முக்கிய போட்டிகளான ஐ.சி.சி., சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களில் நன்றாக ஆட்டத்தை வெளிப்படுத்தியும் முக்கிய போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவுவது தொடர்ந்து வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web