சாம்பியன் டிராபி பரிசுத்தொகை... ஐசிசி அறிவிப்பு!
சாம்பியன் டிராபி போட்டிகள் துபாயில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.

அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.45 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். அதே போல் 2வது இடம் பெறும் அணிக்கு ரூ. 9.72 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
