அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்தி வருகிறது. மறுபக்கம் அவ்வப்போது பெய்யும் மழையும் குளிர்வித்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது  குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம்  4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெயில் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 28ம் தேதியான  இன்றும் ஏப்ரல் 29ம் தேதியான நாளையும்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் , மழை

நாளை  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web