ரூ.300 கோடி ஊழல் வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுதலை - நீதிமன்றம் உத்தரவு!
ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கில், தற்போது அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2014-2019 வரையிலான சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சிக்காலத்தில், 'ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவனத்தில்' சுமார் 300 கோடி ரூபாய் அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி (CID) போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 52 நாட்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (TDP) மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திரப் பிரதேச காவல்துறை, தற்போது நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், சந்திரபாபு நாயுடு இந்த ஊழலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் மீது குற்றம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தது.
காவல்துறையின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஏசிபி (ACB) சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவை இந்த ஊழல் வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து இன்று உத்தரவிட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
